இத்தாலியில் குடியேற சென்ற ஆபிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
ஆபிரிக்க கண்டத்தில் உள்ள லிபியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு வருவதையடுத்து அந்நாட்டில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
அதேபோன்று லாம்பிடுஸ் என்னும் தீவுப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இத்தாலியில் குடியேறுவதற்காக படகு ஒன்றில் புறப்பட்டனர்.
இத்தாலியின் எல்லைக்குள் நுழைய முற்பட்ட போது அந்நாட்டின் கடலோர காவல் படையினர் வழிமறித்து சோதனையிட்டனர்.
சோதனையில் அகதிகளாக தங்கள் நாட்டிற்குள் தஞ்சம் புக இருப்பதையும், மேலும் அகதிகளில் சுமார் 25 பேர் பலியாகியிருப்பதையும் கண்டறிந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள பொலிஸார் வசம் ஒப்படைத்தனர். பலியானவர்களில் 16 பெண்களும், 11 பேர் குழந்தைகளும் அடங்குவர்.
