இலங்கையின் வடமேல் கடற்பரப்பில் மண்மேட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி படகு ஒன்றையும், அதிலிருந்த ஐந்து மீனவர்களையும் இலங்கை கடற் படையினர் பாதுகாப்பாக மீட்டெடு த்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
தலைமன்னார் கடற் பரப்பில் கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் ‘செல்வபூதி’ என்ற மீன்பிடி படகு ஒன்று மண் மேட்டில் சிக்குண்டு இருப்பதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக விரைந்து கடற்படையினர் அந்தப் படகை மற்றொரு கடற்படை படகின் உதவியுடன் மீட்டெடுத்து தலைமன்னார் இறங்கு துறைக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அதேநேரம் ஐந்து இந்திய மீனவர்களுக்கும் தேவையான உணவு மற்றும் குடிபானங்களையும் கடற்படையினர் வழங்கியுள்ளனர்.
மீட்டெடுத்த இந்திய மீனவ படகையும், ஐந்து மீனவர்களையும், தலை மன்னாருக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரிடம் இலங்கை கடற்படை யினர் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ள தாகவும் கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
கடற்படையினர் வழங்கிய உதவிகளுக்கு இந்திய மீனவர்கள் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
