புதன், 3 ஆகஸ்ட், 2011

சைப்பிரஸ் கடலில் இரு இலங்கை இளைஞர்கள் பலி

இலங்கை யைச் சேர்ந்த இரு தமிழ் இளை ஞர்கள் சைப்பிரஸ் தெக்கெ லிய கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி யொருவர் தெரிவித்தார்.

லிங்க கொடிவேல் வினோராஜ் (21) மற்றும் முத்துலிங்கம் பிரபா கர் (26) ஆகிய இலங்கையர்கள் இருவரே சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக சைப்பிரஸிலுள்ள இலங்கை கொன்சுயூலர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சைப்பிரஸில் பணிபுரியும் ஐந்து இளைஞர்கள் கடலில் நீராடியுள்ளனர். இதன்போதே மேற்படி இரு இளைஞர்களும் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நீராடச் சென்று சுமார் 15 நிமிடங்களில் தம்முடன் நீராடிய இரு இளைஞர்களையும் காணவில்லையென ஏனைய மூன்று நண்பர்களும் சைப்பிரஸ் பொலிஸில் முறையிட்டதையடுத்தே, பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின் சென்று தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன் போது இலங்கையைச் சேர்ந்த மேற்படி இரு தமிழ் இளைஞர்களினதும் சடலங்கள் கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவர்களுடைய சொந்த இடம், வயது மற்றும் ஏனைய விவரங்கள் தொடர்பாக சைப்பிரஸ் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அமைச்சின் கொன்சுயுலர் பிரிவு சைப்பிரஸிலுள்ள கொன்சுலர் பிரிவுடன் இணைந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சின் அதிகாரி கூறினார்.

இவ்விருவரும் நீந்துவதற்கு தெரி யாமல் கடலுக்குச் சென்றதன் விபரீ தமே இதுவென சைப்பிரஸ் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.