சனி, 6 ஆகஸ்ட், 2011

பதுளையில் பஸ் விபத்து - 32 பேர் காயம்

பதுளை சொரணதொட்ட, வெலிஹித பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 6.30 அளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

உடுகேகந்தவிலிருந்து பதுளை நோக்கி வந்துக் கொண்டிருந்த பஸ் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலை கவலைக்குரியது அல்ல என பதுளை பொலிஸார் குறிப்பிட்டனர்.