மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வீடுகள் சேதமடைந்தவர்கள் தமது வீடுகளை திருத்துக்கொள்வதற்கு இராணுவத்தினால் உதவிகள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு டேவா மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபக்ஸ் பெரேரா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பல அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தமது வீடுகளை இழந்த 89 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொள்வதற்காக சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டிடப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
