புதன், 3 ஆகஸ்ட், 2011

ஸ்ரீ கணேஷா முதியோர் இல்லத்திற்கு உதவிகள்

திருக்கோயில் காயத்திரி கிராமம் எம்.ஜி.ஆர். சமூக சேவை அமைப்பின் ஸ்ரீ கணேஷா முதியோர் இல்லத்திலுள்ள முதியோர்களுக்கு பாண்டிருப்பு அகரம் அமைப்பினால் நுளம்பு வலைகள், உடுதுணிகள், உலருணவுப் பொருட்கள் என்பன இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாண்டிருப்பு அகரம் அமைப்பின் தலைவர் எஸ்.துஷ்யந்தன், பொருளாளர் எஸ்.கஜேந்திரன், ஆலோசகர் கே.விநாயகமூர்த்தி, மகளிர் அமைப்பினர் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.