புதன், 3 ஆகஸ்ட், 2011

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என்.டி.ரி.வி. - ஸ்டைல் நடிகர் விருது

என்.டி.ரி.வி. - ஹிந்து தொலைக்காட்சி ஆண்டு தோறும் 5 வெவ்வேறு துறைகளில் 34 பிரிவுகளில் லைப் ஸ்டைல் விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ரெயின் ட்ரீ விடுதியில் நடந்தது. விருதுக்குரியவர்களை என்.டி.ரி.வி. - ஹிந்துவின் பார்வையாளர்களே ஒன்லைன் மற்றும் குறுந்தகவல் மூலம் வாக்களித்து தெரிவு செய்திருந்தனர்.

அந்த வகையில் பல்வேறு கலைஞர்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஆனால் ஒரேயொரு விருது வழங்கப்பட்டபோது அரங்கமே அதிர்ந்தது. அது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்ட மிகச் சிறந்த ஸ்டைலான நடிகர் என்ற விருது தான்.

இந்த விருதினை ரஜினிக்கு அறிவித்த, நிகழ்ச்சி தொகுப்பாளர் அனைவரையும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பச் சொல்ல, அரங்கம் அதிர்ந்தது. விருதினை ரஜினி சார்பில் பெற்றுக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினி, இந்த விருதினை அறிவித்த என்.டி.ரி.வி. - ஹிந்துவுக்கு அப்பா தனது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். தனக்காக பிரார்த்தித்த அன்பு ரசிக உள்ளங்களுக்கு தனது வணக்கத்தை தெரிவித்துள்ளார் என்றார்.

சிறந்த ஸ்டைலிஷான நடிகைக்கான விருது திரிஷாவுக்கு வழங்கப்பட்டது. ஏற்கெனவே விஜய் தொலைக்காட்சி விருது விழாவிலும் மக்கள் அபிமான நடிகர் விருது ரஜினிக்கு, மக்கள் விரும்பும் நடிகைக்கான விருது திரிஷாவுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.