யாழ். பழைய பூங்கா வீதியில் நேற்றுக் இரவு மோட்டார் சைக்கிளில் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பழைய பூங்கா வீதி சுண்டுக்குளியை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான முத்து நடேசன் (வயது 87) என்பவரே மேற்படி விபத்தில் உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த வயோதிபர் தேவாலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் வந்தவர் அவர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், தலையில் படுகாயமடைந்த முதியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். ஆயினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சடலத்தை பார்வையிட்ட யாழ். நீதவான், அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்தார்.
மோதிவிட்டுத் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதியைத் தேடி யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
