யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள் அநாதைகளுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களுடைய வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சில் இடம்பெற்றது.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் பணிப்பாளர் கைதர் எச். அல் - ஜஹதலி அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள் அநாதைகள் தொடர்பான விஷேட நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வதற்கும், இலங்கையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வைத்திய முகாம்கள் நடாத்துவதற்கும் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் பணிப்பாளர் கைதர் எச். அல் - ஜஹதலி இணக்கம் தெரிவித்தார்.
