தமிழக அரசு இலங்கை அகதிகளின் வீடுகளை அபிவிருத்தி செய்யவும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் என இந்திய ரூபா 25 கோடியினை ஒதுக்கியுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், முகாமில் உள்ள சுய உதவி அமைப்பில் உள்ள 416 பெண்களுக்கு இந்திய ரூபா 10,000 நிதியுதவி வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் வரவு செலவு திட்ட உரையின் போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வழங்கப்பட்ட உதவித் தொகைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட தொகை இந்திய ரூபா 400ல் இருந்து 1000 ஆகவும், வயதுவந்த தனிநபருக்கு வழக்கப்பட்ட இந்திய ரூபா 288ல் இருந்து 750 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் 12 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு இந்திய ரூபா 400 வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் வரவு செலவு திட்ட உரையின் போது கச்சதீவு பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது
