வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

ஜே.வி.பியினர் மீண்டும் நாசக்கார வேலைகளிலா?

1980 களில் அரச உடமைகளுக்கு சேதாரத்தினையும் நஷ்டத்தினையும் ஏற்படுத்தி நாசவேலைகளில் ஈடுபட்டதினைப் போன்று மீண்டும் மக்கள் விடுதலை முன்னணியினர் நாசவேலைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிலர் பணிப்பகிஷ்கரிப்புக்கு அப்பால் சென்று இவ்வாறான நாசவேலைகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 3ம் திகதி கேகாலை ஹப்புகல பகுதியில் மின் விநியோகத்துக்காக பயன்படுத்தப்படும் உபகரணம்(fuses) ஜந்து மர்மமான முறையில் களட்டப்பட்டுள்ளதாகவும், அது சாதாரணமாக அல்லாது சிறந்த மின் தொழில்நுட்ப அறிவுடைய ஒருவரின் உதவியுடனே களட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.