நாட்டிலுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடாத்துவதற்கான வேட்பு மனு கோரப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்றுத் தெரிவித்தார்.
இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்குரிய வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18ம் திகதி முதல் 25ம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்று கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த உள்ளூராட்சி சபைகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ம் திகதியோ அதற்கு முன்னரோ தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த 23 உள்ளூராட்சி சபைகளில், 17 மாநகர சபைகள் ஒரு நகர சபை, 5 பிரதேச சபைகள் அடங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
