இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் கண்பார்வை குறைபாட்டுக்கு முகம் கொடுத்திருப்பதாக சுகாதார அமைச்சு நடாத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேநேரம் மேலும் நான்கு லட்சம் பிள்ளைகள் இப்பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இப்பாதிப்பிலிருந்து பாடசாலைப் பிள்ளைகளைப் பாதுகாக்கவென சுகாதார அமைச்சு ‘பார்வை 2020’ என்ற விஷேட வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பார்வைக் குறைபாட்டு பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள பிள்ளைகளுக்கு சீரான பார்வையை மீண்டும் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இவ்வேலைத் திட்டத்தின் ஊடாக மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இற்றை வரையும் 20 ஆயிரம் மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக பார்வை 2020 திட்டத்தின் தலைவரும், மேலதிக செயலாளருமான டொக்டர் பாலித மஹீபால நேற்று கூறினார்.
இவ்வாறு பார்வைக் குறைபாட்டுப் பிரச்சினைக்கு பாடசாலை பிள்ளைகள் முகம்கொடுக்க பரம்பரை அலகு உட்பட சில செயற்பாடுகளும் துணைபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
