களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் போரதீவு கிராமத்தில் திடீரென நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்துள்ளதாகவும் அதற்கான காரணம் சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இச்சம்பவம் நடைபெற்றதுடன் நேற்றைய தினம் இறந்த காகங்களை அப்புறப்படுத்தப்ப ட்டதாகத் தெரிவித்த பொலிஸார், நேற்று அத்தகைய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இக்காகங்கள் இறந்ததற்கான காரணங்களை அறிவது தொடர்பில் பிராந்திய சுகாதார பரிசோதகர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் பொடிநிலமே தலைமையிலான குழுவொன்றும் செயலில் இறங்கியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்
