வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவேன் என்ற கணவன் செய்ததென்ன?

திருமண பதிவுக ளின் போது, ஒரு கணவன் திருமண பதிவாளர் முன்னிலை யில் நான் வாழ்நாள் பூராவும் உன்னை என் கண் இமையைப் போல் அன்புடன் பராமரிப்பேன் என்ற சட்டபூர்வமான பிரதிக்ஞையை அளிப்பதுண்டு. அவ்விதம், தன் புதுமனைவிக்கு அளிக்கும் வாக்குறுதியை இந்த மனிதன் பல்லாண்டுகளுக்குப்

பின்னர் மீறி, அப்பெண்ணை கைகளால் அடித்தே கொலை செய்யுமளவுக்கு கொடியவனாக மாறியிருக்கிறான். இந்த பரிதாப சம்பவம் ஹந்தலை பிரதேசத்திலுள்ள அலகோடவத்தை பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.

குடும்பத்தில் பல்லாண்டு காலம் இருந்துவந்த ஒரு தகராறு பற்றி கணவனுக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் உச்ச கட்டத்தை அடைந்ததை அடுத்து, அந்த மனிதன் தன்னுடைய 52 வயது அன்பு மனைவியை கைகளால் அடித்து, காயப்படுத்தினார். சுயநினைவற்றிருந்த அந்தப் பெண் உடனடியாக றாகமை போதனா ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட வேளையில் துயிர் துறந்தார். கணவனை கைது செய்துள்ள பொலிஸார் அவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார்கள்.