பஸ்ஸில் தன்னந்தனியாக பிரயாணம் செய்து கொண்டிருந்த ஓர் அழகிய இளம் பெண்ணை பாலியல் ரீதியில் சேஷ்டைகள் புரிந்து துன்புறுத்த எத்தனித்த ஒரு இளம் காதல் மன்னன் வகையாக மாட்டிக் கொண்டு, பஸ்ஸில் இருந்த சக பிரயாணிகளினால் கைகளாலும், கால்களாலும் நையப்புடைக்கப்பட்ட பின்னர், பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் பிலியந்தலையில் இடம்பெற்றது.
120 இலக்க பஸ் பாதையில் ஹொரனைக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. பஸ்ஸின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்த பல பயணிகள் இந்த மன்மதன் அந்த அப்பாவி இளம் பெண்ணை துன்புறுத்தும் சேஷ்டைகளை அவதானித்துக் கொண்டு ஆத்திரத்துடன் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்களாம்.
bஇந்த மனிதனின் துன்புறுத்தலை தாங்க முடியாமல் அந்தப் பெண் “ஐயோ என்னை காப்பாற்றுங்கள்” என்று குரலொழுப்பிய பின்னர், பின் ஆசனங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அவனைப் பிடித்து, போதியளவுக்கு அடித்து, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத் துவிட்டனர். தற்போது, பொலிஸ் சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த காதல் மன்னனை கெஸ்பாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
