அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக குடியேறி வந்த ஒரு தொகுதியினர் விரை வில் மலேஷியா அனுப்பப்படவுள்ளதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோரை மலேஷியாவுக்கு அனுப்புவது தொடர்பான உடன்படிக்கை அண்மையில் இரு நாடுகளுக்கு மிடையே கைச்சாத்தி டப்பட்டது.
பணம் சம்பாதிக்கும் நோக்குடன் சில முகவர்கள் இவ்வாறு மக்களை சட்ட விரோத குடியேற்றத்துக்கு அழைத்து வருகின்றனர். போதிய வசதிகள் செய்யப்படாத தோணிகள் படகுகள் என்பவற்றில் இவர்கள் கொண்டுவரப்படு வதால் பாரிய உயிர்ச் சேதங்களும் ஏற்படுகின்றன.
இவ்வாறான உயிர்ச் சேதங்களை தவிர்க்கவும் சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கவும் அவுஸ்ரேலியாவில் கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளது இதில் மலேஷியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவதும் ஒன்று.
இவ்வாறு செய்வதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக நுழைய முனைவோரையும் முகவர்களையும் கடுமையான தொனியில் எச்சரிப்பதும் இதன் ஆபத்துக்களை உணர வைப்பதுமே இதன் நோக்கமென்றும் அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போயன் தெரிவித்தார். ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தே அதிகமானோர் சட்டவிரோதமாக தோணி, படகுகளில் நுழைகின்றனர்.
இவர்கள் கிறிமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மலேஷியா அனுப்பப்டுவர்.
போதிய ஆதாரங்களை நிருபித்தால் அவுஸ்திரேலியாவுக்குள் அழைப்பது பற்றி ஆலோசனை செய்யப்படும். சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் அமைப்பு என்பன மலேஷியாவுடன் செய்து கொள்ளப்பட இந்த உடன் படிக்கையை விமர்ச்சிக்கின்றன. மனித உரிமைகளை அவுஸ்ரேலியா மீறுவதாகவும் குறை கூறுகின்றன. ஆனால் இவை பெறுமதியான மனித உயிர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே செய்யப்பட்டதாகவும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் விளக்கினார். சட்டவிரோத முகவர்களால் அழைத்து வரப்படும் இம்மக்கள் படகுகள், தோணிகளில் படும் அவலங்களை தெளிவான வீடியோ படங்களூடாக காட்டியுள்ளோம் என்றும் அமைச்சர் சொன்னார்.
