கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டியான பகுதியில் 14 வயதுடைய சிறுமி தனது காதலனால் பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
இந்த கற்பழிப்புச் சம்பவம் கடந்த 10ம் திகதி இடம்பெற்ற நிலையில் கொஸ்வத்தை பொலிஸ் நிலையத்திற்கு இது குறித்து நேற்றுதான் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 வயது சிறுமி இளைஞன் ஒருவர் மீது காதல் கொண்டுள்ளார்.
குறித்த இளைஞன் சிறுமியை தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நேற்று மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர் எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
