பொகவந்தலாவை பிரதேசத்தில் ஆபாசக் காணொளி இறுவெட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் அவர் பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கும் ஆபாசக் காணொளிகளை இட்டுக் கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் பயன்படுத்திய கணினி மற்றும் இறுவெட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
