இந்தியக் கடவுச்சீட்டுடன் டுபாயில் இருந்து இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட இலங்கையர் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதான வசந்தன் என்பவராவர். இவர் கடந்த ஞாயிறு டுபாய்க்கு சென்றிருந்த வேளையில் டுபாய் விமான நிலைய அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் இவர் போலிக் கடவுச்சீட்டின் மூலம் பயணத்தை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குறித்த நபர் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் பாரீஸ் செல்வதற்காக டுபாய்க்கு சென்றதாகவும் தமிழ்நாடு முகவர் ஒருவர் மூலமாக போலிக் கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து இரண்டு வருடங்கள் முன் இந்தியாவுக்கு சென்ற வசந்தன் அவரது உறவினர்களுடன் அகதி முகாமில் தங்கியிருந்துள்ளார்.
இவ்வேளையில், வசந்தனுக்கு கடவுச்சீட்டினை பெறுவதற்கு உதவியர்களையும், வசந்தன் கொச்சின் விமான நிலையத்தை தெரிவு செய்வதற்கான காரணத்தையும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
