ஐக்கிய தேசியக் கட்சியின் சுலோகங்கள் குறித்து விமர்சிப்பதற்கு முன்னர் தமது அமைச்சில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளுமாறு கனியவள அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுசில் பிரேமஜயந்த தெரிவித்த கருத்து தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கயந்த கருணாதிலக இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் உணர்வுகள் மூலம் அரசாங்கம் வாக்குகளைப் பெற முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் கொழும்பு மக்களுக்கு வழங்கிய ஒரே ஒரு அபிவிருத்தி அவர்களை அவர்களுடைய வீட்டிலிருந்து வெளியேற்றியது என கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டினார்.
