திங்கள், 19 செப்டம்பர், 2011

வில்பத்து தேசிய பூங்காவில் காணப்படும் சோதனைச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை

வில்பத்து தேசிய பூங்காவில் காணப்படும் இராணுவ மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை படிப்படியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநலசேவைகள் மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்கான கோரிக்கை பாதுகாப்பு அமைச்சிடம் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுற்றுலா ஒருங்கமைப்பாளர்கள் இவ்வாறு சோதனைச்சாவடிகளால் சௌகரியமின்மை காணப்படுவதாக தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.