திங்கள், 19 செப்டம்பர், 2011

சீனிக் களஞ்சியசாலையில் அமைச்சர் மேர்வின் சில்வா திடீரென சென்று சோதனை

களனி பெத்தியாகொட பகுதியில் சுகாதாரமற்ற வகையில் காணப்பட்ட சீனிக் களஞ்சியசாலை ஒன்றுக்கு அமைச்சர் மேர்வின் சில்வா திடீரென சென்று சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

இன்று காலை கிடைக்கப்பட்ட தகவலை அடுத்து உடனடியாக செயற்பட்ட அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேச சபை உறுப்பினர்களுடன் குறித்த களஞ்சியசாலைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார்.

குறித்த களஞ்சியசாலையிலிருந்து களனி விற்பனை நிலையங்களுக்கு சுகாதாரமற்ற சீனி விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து அமைச்சர் மேர்வின் சில்வாவினால் சுகாதார பரிசோதகர்கள் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு அமைச்சர் மேர்வின் சில்வாவினால் சுகாதார பரிசோதகர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.