ஆணமடுவ இங்கிரிகினிபிட்டிய "எச்1" கிராமத்தில் புதையல் தோண்ட தயார் நிலையில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களுள் "எச்1" கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் அடங்குவதோடு சில பிக்குமார்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுக்க பிரதேசத்தில் இருந்து இவரக்ள் புதையல் தோண்டவென வந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கையடக்க தொலைபேசிகளும் பூஜைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
