திங்கள், 19 செப்டம்பர், 2011

ஹஜ் கடமைக்கான இலங்கை யாத்திரிகள் தொகை அதிகரிப்பு

ஹஜ் புனித கடமைக்காக செல்லக்கூடிய இலங்கை யாத்திரிகளின் தொகையை 3800 ஆக சவுதி அரேபியா அதிகரித்துள்ளது.

முன்பு அனுமதிக்கப்பட்ட யாத்திரிகளைவிட தற்போது 1000 பேர் அதிகமாக செல்லக்கூடிய வாய்ப்புள்ளதாக சவுதி அரேபியாவுக்கான இலங்கை கொன்சல் ஜெனரல் ஆதம்பாவா உதுமாலெப்பே தெரிவித்துள்ளார்.

உதுமாலெப்பை தனது பதவியினை கடந்த வாரம் பொறுப்பேற்றிருந்தார்.

இதன் முன்பு சபருல்லா கான் குறித்த பதயில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்பு உதுமலெப்பை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைத் தலைவராக இருந்தார்.

மேலும் கென்சல் ஜெனரலாக நியமனம்பெற்று சவுதி அரேபியா விஜயம் மேற்கொண்ட போது ஹஜ் யாத்திரிகளின் விஜயம் கண்டு மனப்பூரிப்படைந்தேன், என் சேவையை இலங்கையர்கள் நன்மை பயக்கும் வகையில் வழங்குவேன் என ஆதம்பாவா உதுமாலெப்பே தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் நற்பெயருக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு சவால்களுக்கும் தான் முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் சவுதியில் உள்ள இலங்கையர்களை கலாச்சாரத்தின் வழிநடத்த முனைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹஜ் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் அப்துல் ஹமீட் மொஹமட் பௌசி இம்முறை ஹஜ் பயணத்துக்காக 5000ம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டின் சனத்தொகையான 20.2 மில்லியனில் 7 சதவீதம் முஸ்லிம்கள் இரும்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு முதற்குழு ஒக்டோபர் 6ம் திகதி தமது பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர், மக்கா மற்றும் மதீனாவில் யாத்திரிகளுக்கு உதவிகளை வழங்க இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.