சனி, 17 செப்டம்பர், 2011

அமெரிக்காவின் போர் விமானங்கள் மோதி பார்வையாளர்கள் மீது விழுந்தது:

அமெரிக்காவின் ரெனோ நகரில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு இதை ரசித்து பார்த்தனர். 2 போர் விமானங்கள் விண்ணில் பாய்ந்து ஒரே நேரத்தில் சாகசத்தில் ஈடுபட்டது.

அப்போது 2 விமானங்களும் திடீர் என்று ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதைப் பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓட முயன்றனர். அவர்கள் மீது விமானங்கள் விழுந்து நொறுங்கியது. இதில் ஒரு விமானத்தில் இருந்த 74 வயது பைலட்டும், மற்றொருவரும் பலியானார்கள். 54 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 15 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.