உலக பொருளாதாரம் அபாயகரமான நிலையில் இருப்பதாக உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோயலிக் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலிருந்து விடுபட, அமெரிக்கா, ஜப்பான் மற் றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள் ளார். அமெரிக்காவின் கடன் அதிகரித்துள்ளதால் அந்நாட்டு பொருளாதாரம் கவலைக்கிடமாகி உள்ளது. இதுபோல் ஐரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலைமையை சமாளிப்பது குறித்து உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியமைப்பின் பொருளாதார நிபுணர்கள் அடுத்த வாரம் கூடி விவாதிக்க உள்ளனர்.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இல்லாவிட்டால், வளர்ந்த நாடுகளின் பாதிப்பு வளரும் நாடுகள் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் நிதி நெருக்கடி மீண்டும் பரவி உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என உலக வங்கி தலைவர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
