பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள “எதிர்கால சந்ததியை பாதுகாப்போம்” வேலைத்திட்டத்திற்கு ஜப்பானின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் 450 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படவுள்ளன.
இத் துவிச்சக்கர வண்டிகள் பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு எதிர்வரும் 19-09-2011 அன்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் இ.தொ.கா. தலைவருமான முத்து சிவலிங்கத்தினால் நுவரெலியா அரசாங்க அதிபர் அலுவலகத்தில் (கச்சேரியில்) வைத்து காலை 10 மணிக்கு வழங்கப்படவுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினதும் கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினதும் பணிப்புரைக்கமைய இத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படுகின்றன.
