டுபாய் சந்தைக் கட்டடத்தொகுதியில் பெண்களுக்கான கழிவறைத் தொகுதியில் பிலிப்பைன்ஸ் பெண்ணொருவர் பயன்படுத்திக் கொண்டிருந்த கழிவறையினை எட்டிப்பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையருக்கு 2000 திர்ஹாம் தண்டப் பணம் செலுத்துமாறு டுபாய் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் பெண்களுக்கான கழிவறையில் இருந்த போது இலங்கையர் அருகில் இருந்த கழிவறையிலிருந்து எட்டிப்பார்த்ததாக மற்றுமொரு அரேபியப் பெண் குறித்த பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், உடனே பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் குறித்த கழிவறையின் கதவினை தட்டி இலங்கையரின் கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது அவற்றில் எதுவித புகைப்படங்களும் இருக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரேபியப் பெண் தான் கைகழுவிக் கொண்டிருந்த வேளையில் குறித்த இலங்கையர் பிலிப்பைன்ஸ் பெண் இருந்த கழிவறையை மற்றுமொரு கழிவறையின் கதவைச் சாத்திவிட்டு உள்ளிருந்து எட்டிப்பார்த்ததாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இலங்கையருக்கு 2000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், வழக்குத் தொடர்பான இறுதித் தீர்ப்பு 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
