வெள்ளி, 16 செப்டம்பர், 2011

வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்: 20 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் கைபர் - பக்துங்க்வா மாகாணத்தில் திர் மாவட்டத்தில் அரசுக்கு ஆதரவான பழங்குடி இனத் தலைவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின்போது நடைபெற்றது. பயங்கரமான இந்த தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த இடத்திலேயே 20 பேர் கொல்லப்பட்டனர் என்று போலீஸôர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

தற்போது இறந்துபோன பழங்குடியினத் தலைவர், மற்றொரு தலைவரான மாலிக் முகமது ஜரீன் என்பவருக்கு உறவினர் என்றும் அதனால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு தலைவரான ஜரீன், ஆப்கனில் உள்ள குனார் பகுதியில் ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், பொதுவாக இதுபோன்ற தாக்குதல்களை தலிபான்களே செய்வது வழக்கம்.