வெள்ளி, 16 செப்டம்பர், 2011

அங்கோலாவில் ராணுவ விமான விபத்தில் 30 பேர் இறந்தனர்.

அங்கோலாவில் புதன்கிழமை நிகழ்ந்த ராணுவ விமான விபத்தில் 30 பேர் இறந்தனர்.

தென்-மத்திய ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் உள்ள ஹுவாம்போ விமான நிலையத்தில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவ்விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 ராணுவ ஜெனரல்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எண்ணெய் வளம் மிக்க அங்கோலாவில் 2002-ம் ஆண்டில்தான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.