சனி, 17 செப்டம்பர், 2011

சட்ட விரோத மின்சார பாவனை ; அபராதமாக 23 மில்லியன் ரூபா

திருட்டு மின்சாரம் பெறுபவர்களை கண்டுபிடிப்பதற்கென நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் மூலம் 23 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்ததாக மின் சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. கடந்த மாதம் நாடு பூராவும் நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்புகளின்மூலம் திருட்டு மின்சாரம் பெறுதல், மின்மாற்றியை மாற்றுதல் என்பன தொடர்பில் 208 பேர் பிடிபட்டனர்.

இவர்களிடமிருந்து நீதிமன்றம் தண்ட மாக 24 இலட்சம் ரூபாவும் மின்சார சபை நஷ்டஈடாக 207 இலட்சம் ரூபாவும் பெறப்பட்டது. இதன்போது மோசடியாக மின்சாரம் பெற்றது தொடர்பாக 19 பேரும் மின்மாற்றியை மாற்றியது தொடர்பில் 189 பேரும் பிடிபட்டனர்.

ஜுலை மாதத்திலும் மோசடியாக மின்சாரம் பெற்றது தொடர்பில் 23 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டது.