திங்கள், 26 செப்டம்பர், 2011

இந்தியாவில் 37 இலங்கையர்கள் கேரளா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது

ஏர்ணாக்குளம் மாவட்டம் கொத்தமங்களம் பிரதேசத்தில் 37 இலங்கையர்களை கேரளா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று காலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 26 ஆண்களும், 7 பெண்களும் மற்றும் 4 சிறுவர்களும் உள்ளடக்குவதாக கேராளா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் குடியிருந்து வந்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு அகதி முகாம்களில் இருந்து கொத்தமங்களம் பிரதேசத்துக்கு வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள புலனாய்வுத் துறையினர் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக கேராளாவினை இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு செல்லும் ஒரு தளமாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முன்பு இருதடவைகள் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இருகுழுக்கள் கேரளா பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முதற்தடவை 2010ம் ஆண்டு கொல்லம் பிரதேசத்தில் 36 இலங்கையர்கைள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டாவது தடவை கொச்சி பிரதேசத்தில் 16 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என இந்திய உடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.