சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த இந்திய பிரஜைகள் இருவர் பிடிபட்டுள்ளனர்.
கல்முனை - பாண்டிருப்பு பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் குறித்த இரு இந்திய பிரஜைகளும் பிடிக்கப்பட்டுள்ளனர்.
பிடிபட்டவர்களிடமிருந்து இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சாரி - 12, சல்வார் - 34, வேட்டி - 02, சட்டைத் துணி - 21 ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பிடிபட்ட இந்தியர்கள் கல்முனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
