தேர்தல் தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தலுடன் சம்பந்தப்பட்ட 33 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றில் 22 முறைப்பாடுகள் சட்டவிரோதமாக சுவரொட்டி ஒட்டியமை தொடர்பிலானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோதமான முறையில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட 5 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார்.
