வியாழன், 15 செப்டம்பர், 2011

புளூ ஹோலில் படம் தயாரிக்க சென்ற 11 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்

பெலிஸில் நகரத்தில் படப்பிடிப்புக்கென கூறிச் சென்ற 11 இலங்கையர்கள் பெலிஸை அமெரிக்காவுக்கு செல்ல ஒரு தளமாக பயன்படுத்த இருந்தனர் என்ற சந்தேகத்தின் நாடு கடத்தப்படவுள்ளனர்.

மேலும் இவர்கள் விசாரணைகளின் போது தாம் பெலிஸ் புளூ ஹோலில் படப்பிடிப்பை மேற்கொள்ள வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர்கள் இலங்கையில் திரைப்பட தயாரிப்பில் ஈடுபவர்கள் அல்ல என இலங்கைப் பிரதி நிதிகள் பெலிஸ் நாட்டு அதிகாரிகளுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இவர்களிடத்தே படப்பிடிப்புக்கான உபகரணங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ளுவதற்கான தொகையோ, புளூ ஹோலில் படப்பிப்பை மேற்கொள்வதற்கு ஹெலிகொப்டர்களை வாடகைக்கு பெறும் பணமோ இவர்களிடத்தே இல்லை என்பதால் இவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, குறித்த நபர்களுக்கு எந்த நிறுவனமும் பணம் வழங்குவதாக இலங்கையில் உறுதியளிக்கவில்லை எனவும் அவர்களை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறும் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன ஆணையாளர் நிஹல் மெகுவல் தெரிவித்துள்ளார்.

குறித்த 11 பேரும் இவ்வார இறுதியில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.