ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

அளவ்வ ரயில் விபத்தில் உயிரிழந்தோர் தொகை 5 ஆக அதிகரிப்பு

அளவ்வயில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ரயில் சாரதி, உதவிச் சாரதி, உதவியாளர் மற்றும் ரயிலில் பயணித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருநாகலை மற்றும் அளவ்வ வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளவ்வ பகுதியில் நேற்றையதினம் இரு ரயில்கள் மோதிக்கொண்டது. இந்த விபத்தி காயமுற்ற 30 க்கும் மேற்பட்டோர் தற்போது குருநாகலை மற்றும் அளவ்வ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.