மிகிந்தலை - பரசங்கஸ்வெவ ரயில் பாதைக்கு இடைப்பட்ட ரயில் கடவையில் வவுனியா - மாத்தறை ரயிலுடன் லொறி ஒன்று மோதியதால் லொறிச் சாரதி உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலையளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அனுராதபுர ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீதிக் கடவையில் வீதி தடவை போடப்பட்டிருந்த போதும் குறித்த தடையை மீறி குறித்த சாரதி வாகனத்தை செலுத்திய பொதே இந்த விபத்து நேரந்துள்ளது.
இந்த விபத்தின் பொது ரயில் இன்ஐுன் பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தினால் குறித்த பாதையின் ஊடாக செல்லும் ரயில் சேவைகள் அநுராதபுரம்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
