வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கப்பம் பெற்ற பண்டாரவளை மாநகர சபை உறுப்பினர், இணைப்புச் செயலாளர் விளக்கமறியலில்

கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பண்டாரவளை மாநகர சபையின் உறுப்பினர் மற்றும் மாநகர மேயரின் இணைப்புச் செயலாளர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண்டாரவளை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றை பெற்றுக் கொடுக்க நபரொருவரிடம் 20 லட்சம் ரூபா கப்பம் கோரியதாக பண்டாரவளை மாநகர சபையின் உறுப்பினர் மற்றும் மாநகர மேயரின் இணைப்புச் செயலாளர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கோரப்பட்ட 20 லட்சம் ரூபாவில் 8 லட்சம் ரூபாவை பெற்றுக் கொண்ட வேளை நேற்று லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.