செவ்வாய், 20 செப்டம்பர், 2011

லண்டனில் இலங்கை பிக்கு ஒருவர் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு

பிரிட்டனில் உள்ள முன்னணி சிங்கள பௌத்த பிக்கு ஒருவர் மீது சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனை லண்டனில் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் உறுதி செய்துள்ளனர் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் குரைடனில் உள்ள தேம்ஸ் பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான பகலஹம சோமரட்ண தேரோ என்பவர் மீது செப்டம்பர் 12 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயதுக்கு குறைவான ஒரு பெண்ணின் மீதான இந்த பாலியல் வல்லுறவும், மேலும் மூன்று பாலியல் ரீதியான தாக்குதல்களும் லண்டனில் செல்வந்தர்கள் வாழும் புறநகர் பகுதியான சிஸ்விக் பகுதியில், 1977 ஆம் ஆண்டுக்கும் 1978 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடந்ததாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பிக்கு, செப்டம்பர் 23 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.