மொனராகலையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் சீ4 ரக வெடிகுண்டு காணப்பட்டதை அடுத்து பஸ்சின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை சோதனைச் சாவடியில் பஸ் சோதனை செய்யப்பட்ட போது சாரதியின் ஆசனத்துக்கு அருகேயிருந்து 615 கிராம் எடை கொண்ட சீ4 ரக வெடி பொருள் மீட்கப்பட்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
