விரைவில் மீள்குடியேற்ற அமைச்சை மூடிவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டும் பெருமளவான மக்கள் மீள்குடியேற்றப்பட்டதை அடுத்தும் மீள்குடியேற்ற அமைச்சை தொடர்ந்தும் இயக்குவது அர்த்தமற்றது என்பதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மீள்குடியேற்றப் பொறுப்புகள் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் என்பதும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
