சனி, 24 செப்டம்பர், 2011

கிழக்கு மாகாண சாய்ந்தமருது வீதி புனர்நிர்மாண வேலைகளை ஆரம்பம்

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம், மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுகளில் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் வீதிகள் புனர்நிர்மாண வேலைகளை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம், மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதேநேரம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், அமைச்சின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.