சனி, 24 செப்டம்பர், 2011

தட்டுங்கள் திறக்கப்படும்! மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பிக்கு அரசு அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியில் பிளவுபட்டுள்ளவர்களுல் ஒரு தரப்பினர் அரசாங்கத்துடன் இணைய விரும்பினால் அவர்களை இணைத்துக்கொள்ளத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத் தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி க்குப் பதிலளிக்கையிலெயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு சுயாதீனமான ஜனநாயகக் கட்சி தம்மிடம் வருவோரை கட்சி ஒருபோதும் அலட்சியப்படுத்தாது எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை யினை ஏற்று அதற்கிணங்க செயற்பட முன்வரும் எந்தத் தரப்பினரையும் நாம் ஏற்கத் தயார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பலத்த உட்பூசல் உள்ளது. ஜே.வி.பியும் இரண்டாகப் பிளவுபடப் போகிறது. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே எவ்வித சிக்கலுமின்றி சுதந்திரமாகச் செயற்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்