சனி, 24 செப்டம்பர், 2011

குறைநிரப்பு பிரேரணை 251கோடியே 68 இலட்சம்!பராளுமனறத்தில் சமர்ப்பிப்பு

அரசாங்கம் 251 கோடி 68 இலட்சத்து 41714 ரூபா வுக்கான குறைநிரப்பு பிரேரணையொன்றை நேற்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து .

அரசாங்கத்தின் அவசர தேவைகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு அமைச்சுக்களின் அலுவலகங்களை புனரமைத்தல் உட்பட அவசர தேவை களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தினூடாக அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்விற்காகவும் இதில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கல் ஆஸ்பத்திரி அபிவிருத்தி என்ப வற்றுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.