சனி, 24 செப்டம்பர், 2011

மாநர நிருவாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு பெறப்படும்!மிலிந்த மொரகொட அறிவிப்பு

கொழும்பு மாநகரின் நிருவாக நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் பொது மக்கள் ஆலோசணைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கொழும்பு மாநரசபை மேயர் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மிலிந்த மொரகொட தெரிவித்தார்.

நேற்று கொழும்பு தெமட்டகொடையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவான பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

படித்தவர்கள்- உயர் தொழில்களில் உள்ளவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆயோகியோரும் இந்த மக்கள் ஆலோசணைக்குழுவூக்கு உள்வாங்கப்படுவர் என்றும் மிலிந்த மொரகொட மேலும் தெரிவித்தார்.