கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டிடத் தொகுதியில் இயங்கிவரும் சமய நிறுவனம் ஒன்றிற்க்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிக்குகள் சிலரும் கலந்து கொண்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த வர்த்தக கட்டிடத் தொகுதியின் மூன்றாம் மாடியில் இயங்கிவரும் இந்நிறுவனத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டுள்ளனர்.
அந்நிறுவனத்தில் சமயப்பிரச்சாரங்களுக்கு அப்பால் முறைகேடான செயற்பாடுகள் சிலவும் நடைபெற்று வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
