வெள்ளி, 23 செப்டம்பர், 2011

நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கைப் பெண்ணுக்கு பதினாறு மாத சிறை

அறுவை சிகிச்சை செய்வதாகப் பொய்கூறி நான்கு தடவைகள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டு காப்புறுதிப்பணம் பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்ணொருவருக்கு பதினாறு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து பர்மூடாவில் உள்ள நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது .

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் வரையிலான காலப் பகுதியிலேயே இவ்வாறான மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

காப்புறுதி நிறுவனமொன்றிலிருந்து 76 ஆயிரத்து 297 அமெரிக்க டொலர்களைப் பெற்று காப்புறுதி நிறுவனத்திற்கு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபட்டு வந்த இவர் நான்காவது தடவை மேற்படி நடவடிக்கையில் ஈடுபடும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.