ஐக்கிய தேசியக் கட்சியில் காலி மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக மற்றும் மனுஷ்ய நாணயக்கார ஆகியோரின் தெரிவுகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றுக்குத் தெரிவு செய்யப்படாத கிருஷாந்த புஷ்பகுமார இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.
காலி மாவட்ட வாக்குகளை மீண்டும் எண்ணுமாறும் அதன்போது விருப்பு வாக்குகளை கணக்கிட்டு தனக்கு விருப்பு வாக்கு அதிகம் கிடைத்திருப்பின் தன்னை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு பணிக்குப்படியும் கோரி அவர் இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.
எனினும் சட்டத்துக்கு அடிப்படை அற்ற வகையில் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.
இதன்படி தேர்தல் சட்டங்களை மீறி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது.
