நுவரெலியா - ராகலை பகுதியில் 6 வயது சிறுமியும் திருக்கோணமலை - தம்பலகாமம் பகுதியில் 11 வயது சிறுமியும் காம வெறி கொண்ட காடையர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணகலவத்தை பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவர் நேற்று பகல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸாருக்கு சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உடன் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாகக் கூறப்படும் 57 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, திருக்கோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து நேற்று தம்பலகாமம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை கைது செய்ய தம்பலகாமம் பொலிஸார் பாரிய பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
